ஓங்கிக் கேட்கும் மனதின் இரைச்சல்
அதையும் தாண்டி மெல்லிய
மயிலிறகாய் வருடும் தென்றல்
இருண்ட நடுநிசியில் மின்மினியாய்
நம்பிக்கை கொடுக்கும் ஒளி
நற்பாதையில் என்னை அழைத்துக் கொண்டு
நிற்காமல் ஓடிய நதி
என்னை நிர்மூலம் ஆக்க விழுந்த
இடியை எனக்காய் தாங்கிய மலை
என் மனதை ஆட்கொண்ட தீயவைகளை
எரித்த நெருப்பு
என்றுமே எனக்காய் யோசித்த என் அன்னை
தென்றலாய் , ஒளியாய் , நதியாய் , மலையாய்
நெருப்பாய் , அன்னையாய்
நீ எத்தனை அவதாரங்கள் கொண்டாலும்
நான் உன்னை அழைப்பது ஓர் ஒற்றை
சொல் கொண்டுதான்
"நட்பே "