Monday, 5 March 2012

நின்னை சரண்ணடைந்தேன்




ஆதி முதல் அந்தம் வரை 
 என் மனக்கோட்டையில் 
 உயர்ந்து நிற்பவன் நீ

கனவு காணும் 
என் கருவிழிக்குள் 
நிறைந்திருப்பவன் நீ 

கனவு கலைந்த 
கண்களுக்குள் கள்ளமில்லா 
உன் பிள்ளை முகம் 

காலை பொழுதின் விடியல் 
காட்டும் வேலையின் அழுத்தம் 
அதையும் வெல்லும் 
உன் சன்னச் சிரிப்பு 

மரண வலியுடன் மனதை 
கசக்கும் உன் மெளனம்

குழந்தையாய் சிணுங்கும் 
சில நொடிகள் 

தலைவனாய் கோபம் காட்டும் 
சில கணங்கள் 

அளவில்லா அறிவின் ஆதிக்கத்தோடு 
ஆசானாய் வியக்க வைக்கும் நிமிடங்கள் 

உன்னை கண்ட கணம் முதலாய் 
ஆச்சரியக்குறியோடு நகரும் 
என் பொழுதுகள் 

கணவனாகி பின் என் காதலனும் ஆனவனே 
நின்னை சரண்ணடைந்தேன்
என் ஏழு பிறப்பிற்கும் 

                                                          



      

No comments:

Post a Comment