Monday, 5 November 2012

உறவறியா உணர்வு



என் காலக் கடிகாரத்தின் முட்கள் கிழித்த 
மெல்லிய திரை விலக்கி 
எங்கிருந்தோ புது உறவாய் வந்தாய் 

என்னில் நான் உணராத எனை எனக்குணர்த்தி 
இதயத்தின் இறுதிவரை இறங்கிவிட்டாய் 

நட்பு சொல்லிய கணங்களில் நண்பனாய் நிமிர்ந்தாய்
அன்பு அணைத்த கணங்களில் அன்பனாய் சிறந்தாய்
முட்களாய் முரண்பட்ட வெகு சில நொடிகளும்
மறக்க மலராய் மலர்ந்து நின்றாய்

நான் எனை மறக்கும் நாட்கள் வரினும்
அன்பே உருவாய் என்னை அரண் என
காக்கும் உன்னை என்றும் மறவேன்

கண்கள் என்றும் காணாத
உள்ளம் மட்டுமே உணரும் உயிராகிய
உணர்வின் நிழலாய் தொடரும் உறவு நீ !

Thursday, 25 October 2012

நிலைத்திருக்கும் நினைவுகள் 
**************************
பிறந்து வளர்ந்த இடம் மனதில் பயிரிட்டதோ 
ஆயிரம் ஆயிரம் நினைவுகள் 
அவையாவும் நான் ஆடிய களத்தையும் 
வாடிய கணத்தையும் தன்னுள் உயிராய் 
சேமித்து இன்றும் செழித்து
வளர்ந்து கொண்டே இருக்கிறது

தாய் மாமனின் உயிரம் கண்டு அஞ்சி
அன்னையின் சேலைத் தலைப்பில் ஒளிந்த கணம்
வீட்டு கடைக்குட்டியாய் அல்லி ராஜ்ஜியம்
நடத்திய என் வீட்டு முற்றம்

அக்கா அண்ணன் என எல்லோரும் ஏங்கி நிற்க
என்னை மட்டும் வாரச் சந்தைக்கு
அழைத்துச் செல்லும் பாட்டி
எப்பொழுது உண்டாலும் ஆசையாய் எனக்கு
உணவை ஊட்டாமல் தான் உண்ணாத சிற்றப்பா

பள்ளி விடுமுறையில் அண்ணனே மன்னனாய்
தட்டாமல் பின்பற்றும் சேனை என நாங்கள்
அண்ணன் தலைமையில் மீன் பிடித்த குட்டையும்
களிமண் எடுத்த மாமன் வீட்டுக் காடும்
இன்று காணும் போது வெறும் ஏக்கம் மட்டுமே

காடை விரட்டிய சோளக்காடும்
பாம்பை கண்டு பதறிய ஏரியும்
நீச்சல் கற்றுக் கொடுத்த பக்கத்து வீட்டு அண்ணனும்
மிதிவண்டி ஓட்டிப் பழக்கிய ஆசை அக்காள்களும்
முதல் முதலில் ஓட்டிய அப்பாவின் வண்டியும்
ஐந்தாவது படிக்கும் பொழுது வீட்டுக்குக்
கொணர்ந்த தொலைக்காட்சிப் பெட்டியும்

பள்ளிக் காலத்தில் எழுதிய முதல் கவிதை
போட்டிகள் பெற்றுத் தந்த பரிசு
இன்றும் பசுமையாய் தொடரும் நட்பு

இன்னும் இன்னும் இன்னும்.................
எத்தனையோ ஆயிரம் நினைவுகள்
மூச்சு முட்டும் இத்தனை நினைவுகளும்
நிலைத்திருக்கும் எக்காலத்திற்கும் 


நட்புச் சரித்திரம்
----------------------

தவறு செய்பவன் மனிதன் 
பரிகாரம் தேடிப் பகிர்பவன் நண்பன் 

ஆதரவு காட்டி அணைக்கும் நட்பு
அகிம்சையால் மனம் தேற்றி
மெளனமாய் வலி நீக்கி
வலிய கரம் கொண்டு மீட்டெடுக்கும்

மறக்கப்பட்டு மீண்டது நண்பனாய்
இல்லாமல் தவறு தொடரின் 
விட்டு விலகியும் நின்று விடும்


அன்னையாகிய என்னுள்
**********************

உன்னை என்னுள் உணர்ந்த 
அந்த நாள் முதல் 
என் மனக்கோட்டையின் அரசாட்சி 
முழுவதிலும் நீ

ஏதேதோ கற்பனைகள்
இரவு பகலாய் உன் நினைவு
கையில் உறவாடிய புத்தகத்தில்
கருத்து நிலைக்கவில்லை
கண்கள் தேடியதோ உனக்கான
பெயர் அடையாளத்தை

ஆயிரம் உறவுகள் எனக்கு இருந்தும்
ஆயிரத்து ஒன்றாக
என்னுள் வந்த நீ மட்டுமே எல்லாமாய்

தனிமையை நான் உணராத
அந்தப் பத்து மாதங்கள்
அழகிய அவ்வின்ப நாட்கள் யாவும்
உனக்கே சமர்ப்பணம் உறவே

இதோ உன்னை காணும் ஏக்கத்துடன்
வலி தாங்கி மனம் ஏங்கிய கணம்
உன் குரல் கேட்ட இன்ப சிலிர்ப்புடன்
சிறு மயக்கம்

ஒளி தேடிய கண்ணும்
உன் வாசம் தேடிய நாசியும்
உன் ஸ்பரிசம் தேடிய மனதும்
விழித்து எழுந்ததோ உயிர் வரை
சென்று தாக்கிய வேறு ஒலி கேட்டு

பெரும் சிலிர்ப்புடன் பெற்றவளின்
குரல் கேட்டு திறந்த என் கண்கள்
முழுவதிலும் தெங்கி நின்ற ஏக்கம் யாவும்
என் அன்னையே உனக்காக

அன்னை இன்பம் உணர்ந்த பின்
என் இதயம் முழுவதும்
அம்மா உன் உயிரோவியம்

உள்ளம் நிறைத்த இரு உறவின்
உயிர் ஸ்பரிசம் கண்ட அந்த நொடி
இன்றுவரை இன்பம் தரும் 
நினைவின் கல்வெட்டு


Tuesday, 20 March 2012

நட்பு


ஓங்கிக் கேட்கும் மனதின் இரைச்சல்
அதையும் தாண்டி மெல்லிய 
மயிலிறகாய் வருடும் தென்றல் 

இருண்ட நடுநிசியில் மின்மினியாய்
நம்பிக்கை கொடுக்கும் ஒளி

நற்பாதையில் என்னை அழைத்துக் கொண்டு 
நிற்காமல் ஓடிய நதி 

என்னை நிர்மூலம் ஆக்க விழுந்த 
இடியை எனக்காய் தாங்கிய மலை 

என் மனதை ஆட்கொண்ட தீயவைகளை 
எரித்த நெருப்பு 

என்றுமே எனக்காய் யோசித்த என் அன்னை 
தென்றலாய் , ஒளியாய் , நதியாய் , மலையாய் 
நெருப்பாய் , அன்னையாய் 

நீ எத்தனை அவதாரங்கள் கொண்டாலும் 
நான் உன்னை அழைப்பது ஓர் ஒற்றை
சொல் கொண்டுதான் 

          "நட்பே "

Monday, 12 March 2012

தேடல்



காதலைத் தந்தாய்
கனவைத் தந்தாய்
கண்ணியமான வாழ்வைத் தந்தாய்
நட்பைத் தந்தாய்
நேசத்தைத் தந்தாய்
ஆனாலும் தேடல் கொண்ட மனது
இன்னும் எதையடா தேடுகிறது உன்னிடம்  

Monday, 5 March 2012

நின்னை சரண்ணடைந்தேன்




ஆதி முதல் அந்தம் வரை 
 என் மனக்கோட்டையில் 
 உயர்ந்து நிற்பவன் நீ

கனவு காணும் 
என் கருவிழிக்குள் 
நிறைந்திருப்பவன் நீ 

கனவு கலைந்த 
கண்களுக்குள் கள்ளமில்லா 
உன் பிள்ளை முகம் 

காலை பொழுதின் விடியல் 
காட்டும் வேலையின் அழுத்தம் 
அதையும் வெல்லும் 
உன் சன்னச் சிரிப்பு 

மரண வலியுடன் மனதை 
கசக்கும் உன் மெளனம்

குழந்தையாய் சிணுங்கும் 
சில நொடிகள் 

தலைவனாய் கோபம் காட்டும் 
சில கணங்கள் 

அளவில்லா அறிவின் ஆதிக்கத்தோடு 
ஆசானாய் வியக்க வைக்கும் நிமிடங்கள் 

உன்னை கண்ட கணம் முதலாய் 
ஆச்சரியக்குறியோடு நகரும் 
என் பொழுதுகள் 

கணவனாகி பின் என் காதலனும் ஆனவனே 
நின்னை சரண்ணடைந்தேன்
என் ஏழு பிறப்பிற்கும் 

                                                          



      

Saturday, 25 February 2012

விரதம்

என் மனக்கருவரையில்
கடவுளோ நீ
உன்னை கண்டதும்
என் மொழி விரதம் இருக்கிறதே  

Monday, 6 February 2012

பயம்

ஒவ்வொரு பிறந்த தினம் வரும் போதும் ஒரு சிறு பயம் மனதில் வரத்தான் செய்கிறது 

வயது கூடுவதால் வரும் பயம் அல்ல "என் வயதிற்கு தகுந்த மன முதிர்ச்சியை அடைந்துவிட்டேனா என்ற குழப்பத்தால் வரும் பயம் ".

எங்க ஊருப்பக்கம் ஒன்னு சொல்லுவாங்க " வயசுதான் ஆகுது கழுதைக்கு   ஆகுரப்புல ஆனா வயசுக்கு தகுந்த அறிவிருக்க பாருன்னு " ஒருவேளை அதனால் வந்த குழப்பமாக இருக்குமோ 

என்ன செய்ய குழப்பத்துலையே   ஓடுது வாழ்கை      

Sunday, 5 February 2012

படித்ததில் பிடித்தது

உலகப்புகழுக்கு ஒன்பது கட்டளைகள்  

1.அழகிய கனவு ஒன்று வேண்டும்.  

2.அதை அடைவதற்குக் கடும் முயற்சி வேண்டும்


3.அவமானம் பார்க்காத குணம் வேண்டும் 

4.தூக்கம் தவிர்க்கப் பழக வேண்டும் 

5.சிறிய வாய்ப்புகளை நிராகரிக்காமலிருக்க வேண்டும் 

6.ஏமாற்றங்களை விழுங்க வேண்டும் 

7.உள்ளத்தில் ஒரு வெறி ஓயாது புயலாக வீசிக் கொண்டிருக்க வேண்டும்

8.உழைப்பில் உண்மை வேண்டும்

9.அனைத்துக்கும் மேலாகப் பொறுமை வேண்டும்   
  

துளி

எதிர்பார்புகள்  குறைவாக  இருக்கும் பொழுது 
ஏமாற்றங்களும் குறைவாகவே இருக்கும்   

Tuesday, 24 January 2012

பொதுமொழி


அளவுக்கு மின்ஜினால் அமிர்தமும் நஞ்சு - இந்த பழமொழிக்கு ஏற்ற இரண்டு உதாரணம் முகநூலும் (FACEBOOK) , கிரெடிட் கார்டும் (CREDIT CARD).
இந்த இரண்டும் சரியாகவும் ,அளவாகவும் பயன்படுத்த தெரிந்தவர்களுக்கு அமுதம்,தவறினால் உயிரை குடிக்கும் நஞ்சாகிவிடலாம்.

நம்ம பாசைல சொல்லனும்னா
 
ஜாக்கிரதயா இருக்கனும் மாப்பு இல்ல வச்சுடும் ஆப்பு.
  





      

அழகு

எல்லாமே அழகு தான் 
இயற்கையின் படைப்பில் 
அது அருமை , சுமார் , பிரமாதம் ,
நன்றாக இல்லை என முரண்படுவது  
(மனதின்) மனிதனின் பார்வையில்தான் 

Monday, 23 January 2012

நந்தலாலா

 "ஒன்னுக்கு ஒன்னு ஒன்றிணைந்த இந்த உலகத்துல அன்பு மட்டும் இங்கு அனாதையா " - நந்தலாலா திரைபடத்தில் இடம் பெற்ற பாடல் வரிகள் . "நந்தலாலா " இந்த திரைப்படம் மிஸ்கின் இயக்கி நடித்த படம் .பாடல் வரிகள் போலவே படமும் அருமையான ஒரு கவிதை தான்.மிஸ்கின் படங்களில் வாய் மொழிக்கான தேவை மிகவும் குறைவுதான்.

        மெளனம் சொல்லும் மனதின் வலியும்,உடல் மொழியால் சொல்லப்படும் உள்ளது உணர்வுகளும் அருமை .


Saturday, 21 January 2012

சிதறல்கள்

மெளனத்தால் உணர்த்த முடியாத மனதின் வலியை எத்தகைய வார்த்தையாலும் சொல்லி விட முடியாது
  -------------------------
காதல்
ஒரு இனிய வார்த்தைதான்
ஆனால் ஒரு தாய்க்கு
அது எச்சரிக்கை உணர்வைத்தான் தருகிறது


                           
  

Friday, 20 January 2012

சிறுதுளி

எந்த ஒன்றில் நிறைவை காண்கிறோமோ 
அதில் தான் ஒரு சிறு தவறையாவது கண்டுபிடிக்க
துடிக்கிறது   நம் மூளை //////  

Wednesday, 18 January 2012

தை திருநாள்

நகரத்து மண்ணில் மவுனமாய்
மரணித்திருந்த மனது
சொந்த மண்ணின் சுவாசம்
நிறைந்த ஈரக் காற்றால்





உயிர் பெற்று திரும்பி இருக்கிறது
சொந்தங்களுடன் இணைத்த
தை திருநாளுக்கு ஒரு கோடி
நன்றி .........................

 

Friday, 13 January 2012

தந்தையாக தன் மகளுக்கு
எதையும் விட்டுக் கொடுக்கும்
ஆண்கள்
கணவனாக தன் மனைவிக்கு
 எதையும் விட்டுக் கொடுப்பதில்லை
   

Thursday, 12 January 2012

     

     ***கண்கள்****

உள்ளத்து உணர்வுகளை 
சொல்லும் கண்ணாடி   


**அம்மா**
எத்தனை முறை
கூப்பிட்டாலும் 
அலுக்காத ஓர் 
அற்புத வார்த்தை 


Wednesday, 11 January 2012

யாரிடமும் எங்கிருந்தும் எதையும் எதிர்பார்காதவர்களே இந்த உலகில் நிம்மதியான மனிதர்கள்.      

Sunday, 8 January 2012

முரண்





பறவைகள் 
தன் குஞ்சுகள் 
இறை தேடும் பருவம் 
 வந்தவுடன் அதை தன்னிடம் 
இருந்து பிரித்துவிடுகிறது  



மனிதன் தன் தேவை முடிந்து 
சுய சம்பாதனை வந்தவுடன் 
பெற்றவர்களை முதியோர் 
       இல்லத்திர்க்கு 
அனுப்பி விடுகிறான்




Monday, 2 January 2012

புதியவள் தமிழ் ஓவியா

வலை பதிவர்களுக்கு வணக்கம் ,


முதல் முறையாக வலை பதிவுகள் வழியாக உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி, வலை பதிவுகளுக்கு புதியவளான  என்னையும் நட்பின்  கரம் கொண்டு ஏற்பிர்கள் என நம்புகின்றேன்.




                                                                                                நட்பின் நோக்குடன் 
                                                                                                              உங்கள்
                                                                                                         தமிழ் ஓவியா